நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு : விஷால் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு

share on:
Classic

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் என்ற விஷால் தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஆதிகேசவலு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர் சங்க தேர்தலில்  தலையிட பதிவாளருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடைய இருந்த நிலையில், அதற்கு முன் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு அக்டோபருக்கு முன் பதிவாளரிடம் சமர்ப்பித்த ஆவணங்கள் எவை எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்ற விஷால் தரப்பு கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

 

News Counter: 
100
Loading...

aravind