திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரை சேதப்படுத்திய விவகாரம் : ஏர் இந்தியா பதிலளிக்க உத்தரவு

share on:
Classic

திருச்சி விமானநிலைய சுற்றுச்சுவர் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் விமானியின் மனு குறித்து ஏர் இந்தியா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த ஆண்டு துபாய்க்கு சென்ற ஏர் இந்தியா விமானம், சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக, விமானத்தின் பைலட்டான கணேஷ் பாபுவின் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

உத்தரவை ரத்து செய்யக்கோரி, பைலட் கணேஷ்பாபு தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இது தொடர்பாக டெல்லி விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் ஏர் இந்தியா நிறுவனமும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind