ஆணுக்கும் திருநங்கைக்கும் நடந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய உத்தரவு..!

share on:
Classic

ஆணுக்கும் திருநங்கைக்கும் நடந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் இளைஞர் அருண்குமார், அதேபகுதியை சேர்ந்த ஸ்ரீஜா என்ற திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்தை இருவீட்டார்களும் மறுத்துவிட்டனர். அதேபோல் ஆணுக்கும் திருநங்கைக்கும் நடந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யமுடியாது என சார்பதிவாளரும் மறுத்துவிட்டார். 

இதையடுத்து அருண்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் என அந்தஸ்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது. எனவே இருவரது திருமணத்தையும் சட்டப்படி பதிவு செய்யவேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கலப்பு திருமண சலுகைகள் பெறுவதற்கு மனுதாரர்கள் தகுதியானவர்கள் எனவும் குறிப்பிட்டார்.

 

News Counter: 
100
Loading...

aravind