நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை..? தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு..!

share on:
Classic

நளினியை  நேரில் ஆஜர்படுத்துவதில்  என்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் நளினி திருமண ஏற்பாடு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். 

நேரில் ஆஜராக வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை மறுக்க முடியாது என்றும் அவரை நேரில் ஆஜர்படுத்துவதில் உங்களுக்கு என்ன சிக்கல் உள்ளது என்பது குறித்து பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தேவைப்பட்டால் அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை அடுத்த செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

 

News Counter: 
100
Loading...

Ragavan