அதர்வாவின் 100 திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!

share on:
Classic

நடிகர் அதர்வா நடித்துள்ள நூறு படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நூறு திரைப்படத்தை தயாரித்துள்ள எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம், பலூன் படத்தின் வெளியீட்டு உரிமைக்காக தர வேண்டிய தொகையில், ஒரு கோடி ரூபாய் பாக்கி உள்ளதாகவும், அதை தராமல் 100 படத்தை வெளியிட தடை விதிக்க, 70 எம் எம் எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நூறு படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

இந்த தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பலூன் படத்திற்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை வசூலிக்க தனியாக வழக்கு தொடர்வதை விடுத்து, மற்றொரு படமான நூறு படத்துக்கு தடை கோருவதை ஏற்க முடியாது எனக்கூறி படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

News Counter: 
100
Loading...

aravind