ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..?

share on:
Classic

வறட்சி காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகளின் விலை வெகுவாக குறைந்துள்ளது. 

தமிழகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக விளைச்சல் இன்றி விவசாயிகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால் வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை விற்க வேண்டிய அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கே நீரின்றி போராட்டம் நடத்தி வரும் நிலையில், கால்நடைகளை பராமரிக்க யாரும் தயாராக இல்லை. இதனால் சந்தையில் விற்பதற்காக கொண்டு வரப்படும் கால்நடைகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்

குறிப்பாக ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தைக்கு கொண்டு வரப்படும் பெரும்பாலான கால்நடைகளை விற்க முடியாமல் திரும்ப அழைத்துச் செல்வதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் விலை குறைப்பு என்பதே ஆகும். வழக்கமாக 40,000 ரூபாய் வரை விற்பனையாகும் மாடுகள் தற்போது 20,000 - 21,000 ரூபாய் வரை மட்டுமே விலைக்கு போவதால் வியாபாரிகள் மிகுந்த நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

மழையின்றி தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அனைவரும் அள்ளாடி வரும் நிலையில், நீரின்றி வாடும் கால்நடைகளை பராமரிக்கவும் முடியாமல், விற்கவும் முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். 

 

News Counter: 
100
Loading...

aravind