பாதாளத்தில் வீழ்ந்தது பணவீக்கம்...! மெகா சரிவு

share on:
Classic

ஜனவரியில் நுகர்வோர் பணவீக்கமானது (CPI Inflation) கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து இல்லாத அளவிற்கு 2.05 சதவீதமாக பெரும் சரிவை சந்தித்துள்ளது.  

ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்கிற்குட்பட்டு தொடர்ச்சியாக 6-வது முறையாக நுகர்வோர் பணவீக்கமானது சரிவைக் கண்டுள்ளது. நுகர்வோர் பணவீக்கமானது கடந்தாண்டு டிசம்பரில் 2.11 சதவீதமாகவும், நவம்பரில் 2.23 சதவீதமாகவும், அக்டோபரில் 3.38% சதவீதமாகவும் இருந்த நிலையில் தற்போதைய மிகப்பெரிய சரிவு நிகழ்ந்துள்ளது. இதனடிப்படையில் கடந்த ஜனவரி மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்க விகிதங்கள் பின்வருமாறு, 

1. நுகர்வோர் உணவுப்பொருட்கள் பணவீக்கம் 2.17% (டிசம்பரில் 2.51%)
2. காய்கறிகள் பணவீக்கம் 13.3% (டிசம்பரில் 16.14%)
3. வீட்டுப் பணவீக்கம் 5.2% (டிசம்பரில் 5.32%)
4. தானியங்கள் பணவீக்கம் 0.8% (டிசம்பரில் 1.25%)
5. பருப்புகள் பணவீக்கம் 5.5% (டிசம்பரில் 7.13%)
6. உடைகள் மற்றும் காலணிகள் பணவீக்கம் 2.95% (டிசம்பரில் 3.52%)

News Counter: 
100
Loading...

mayakumar