இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு

share on:
Classic

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான  கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய  தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார். அதன்படி, திமுக திருப்பூர் தொகுதியில் சுப்பராயனும், நாகை தொகுதியில் எம்.செல்வராசும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், எம். செல்வராசு, நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினராக ஏற்கெனவே 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

sajeev