"பா.ம.க இறுதி வரை போராடி, 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யும்"

share on:
Classic

8 வழிச்சாலை திட்டம் பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதையில்லை என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சேலம் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பா.ம.க இறுதி வரை போராடி, அந்த திட்டத்தை ரத்து செய்யும் என்று கூறியுள்ளார். மேலும், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும் என முதலமைச்சர் கூறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

8 வழிச்சாலைக்கு எதிராக ஸ்டாலின் ஒரு போராட்டமாவது நடத்தியுள்ளாரா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஸ்டாலினுக்கு 8 வழிச்சாலை திட்டம் குறித்து பேசத் தகுதியில்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind