வசனகர்த்தா கிரேஸி மோகன் கடந்து வந்த பாதை..!

share on:
Classic

கிரேஸி மோகன் தமிழ் திரை உலகின் மிகப்பெரிய நகைச்சுவை கலைஞர்களுள் ஒருவர். தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் பயின்று பின்னர் எம்.டெக் முடித்த மோகன், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

 

சினிமா ஆர்வத்தால் மாது பாலாஜி, சீனு மோகன், சாம்ஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய தன் குழுவுடன் இணைந்து நாடங்கள் அரங்கேற்றினார். கல்லூரி நாட்களில் இருந்தே நாடகத்துறை மீது அதீத ஆர்வம் கொண்டு இருந்தார். இவரது ’கிரேஸி தீவிஸ் ஆஃப் பாலவாக்கம்’(Crazy Thieves in Paalavaakkam) டிராமா அக்காலங்களில் பரவலாகப் பேசப்பட்டது. 

 

மேலும் இவரது ’மேரேஜஸ் ஆர் மேட் இன் சலூன்’(Marriage Made in Saloon) டிராமாவை பார்த்து வியந்த இயக்குநர் கே.பாலசந்தர் ’பொய்க்கால் குதிரை’ என்ற பெயரில் அதனைப் படமாக எடுத்தார். 

 

k.பாலச்சந்தரை தொடர்ந்து கமல் படங்களுக்கு வசனம் மற்றும் நடிக்க வாய்ப்பு கிடைத்து. மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், பஞ்சதந்திரம், அவ்வை ஷண்முகி, பம்மல் கே சம்மந்தம், தசாவதாரம், வசூல் ராஜா mbbs உள்ளிட்ட பல படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இதில் குறிப்பாக  வசூல் ராஜா mbbs படத்தில் இவர் ஏற்று நடித்த மார்க்கபந்து கதாபாத்திரம் இன்றும் யாராலும் மறக்கமுடியாது. சினிமா நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் இவரது காமெடி டிராக்குக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 

 

இவர் திரைப்படம் மட்டும் இல்லாமல் நாடகங்களுக்கு திரைக்கதை அமைத்து நடித்துள்ளார். நாடகத்துறையில் தடம்பதித்த எஸ்.வி.சேகர், விசு, மவுலி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வரிசையில் கிரேஸி மோகனுக்கு முக்கிய இடம் உண்டு. உலகின் பல பகுதிகளில் இவரது நாடகங்கள் அரங்கேறியுள்ளன. சமீபத்தில் கிரேஸி 20-20, சாக்லேட் கிரிஷ்ணா உள்ளிட்ட பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி இயக்கி நடித்துள்ளார்.    
 

 

சமீப காலமாக திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தாத மோகன் நாடகங்களை மட்டுமே இயக்கி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் கல்யாண சமையல் சாதம் படத்துக்கு வசனம் எழுதினார். சில வாரங்களாக உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.  

 

 

News Counter: 
100
Loading...

aravind