இந்தியாவுடன் தோற்றதும் தற்கொலை எண்ணம் தோன்றியதாக பாக். பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்..!

share on:
Classic

உலகக்கோப்பையில் இந்திய அணியிடம் தோல்வியடைந்ததும் தற்கொலை எண்ணங்களே அதிகமாக தோன்றியதாக பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

16-ஆம் தேதி இந்திய அணி உடனான ஆட்டத்தில் பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் அணி வீரர்கள் மீது பலவிதமான விமர்சனங்களை வைத்து வந்தனர். அவர்கள் அளித்த மன வேதனையுடன் அடுத்து நடந்த லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை எதிர் கொண்டு வெற்றியும் பெற்றது பாகிஸ்தான் அணி.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ”இந்திய அணியுடனான ஆட்டத்தில் தோல்வியடைந்ததும் ரசிகர்களும் மீடியாக்களும் எங்களுக்கு அளித்த மன அழுத்ததில் நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். பின்னர் இது ஒரு விளையாட்டு, இந்த ஆட்டத்தில் தோற்றால் என்ன அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெறலாம் என மனதை தேற்றி அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்று காட்டிவிட்டோம்” என கூறியுள்ளார், மேலும் இனி வரும் ஆட்டங்களில் நாஙகள் வெற்றி பெற்று உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்ல முயற்சிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

Saravanan