#MeTooவில் சிக்கினாரா டிராவிட் ... நெட்டிசன்கள் பாராட்டு !

share on:
Classic

MeToo ஹேஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிடின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியில் டிராவிட் நட்சத்திர வீரராக ஜொலித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்,  அவரிடம் பெண் செய்தியாளர் ஒருவர் நேர்காணல் செய்திருந்தார். அப்போது, தம்மை திருமணம் செய்துகொள்ளுமாறு அடம்பிடித்த அந்த பெண் செய்தியாளரிடமிருந்து டிராவிட் தப்பிக்க முயன்றதோடு, அவருக்கு அறிவுரையும் கூறியிருந்தார்.  

தொலைக்காட்சி ஒன்றின் நகைச்சுவை நிகழ்ச்சிக்காக படம்பிடிக்கப்பட்டிருந்த இந்த காணொலி, டிராவிட்டின் ஜெண்டில்மேன் குணத்தை காணுங்கள் என்ற தலைப்பின்கீழ் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாக பரவி வருகிறது.

News Counter: 
100
Loading...

sankaravadivu