வீதிகளில் உலா வரும் 'முதலைகள்' : மக்கள் கடும் அச்சம் !!

Classic

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழைக்கு 20,000 பேர் வீடிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நூற்றாண்டில் இது மாதிரி ஒரு மழையை பார்த்ததில்லை என்று மக்கள் அனைவரும் வேதனையில் உள்ளனர். 

நூற்றாண்டு காணாத மழை: 

ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதிகளில் எப்போதுமே பருவ மழை கடினமாக தான் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கொட்டி தீர்த்திருக்கும் பேய் மழை அனைவரையும் மிரட்டி எடுத்துள்ளது. மழை காரணமாக அந்த பகுதிகள் முழுவதும் வெள்ள காடாகி உள்ளது. மக்களை அனைவரும் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய ராணுவமும், காவல் துறையும் பேரிடர் கால பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். 1100 பேருக்கு மேல் அவசர உதவி எண்ணுக்கு அழைத்துள்ளனர். எல்லாரையும் மீட்கும் பணிகள் நடந்துவருகிறது.

முதலைகள் !

அடித்து துவம்சம் செய்த மழை வெள்ளம் காரணாமாக, அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன . இது ஒரு பக்கம் என்றால், மற்றோரு பக்கம் வேறு ஒரு பயமும் மக்களை வாட்டி வருகிறது.  ஆம் ஆஸ்திரேலிய தெருக்களில் முதலைகள் உல்லாசமாக வளம் வர ஆரம்பித்துள்ளன. இதனால் மக்களின் பயம் பல மடங்கு அதிகரித்துள்ளது. பாம்புகளும் மற்ற விஷ ஜந்துக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எனவே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர்.இத்தோடு அல்ல இந்த கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை துறை அறிவித்துள்ளது.இது பற்றி கூறிய எண்பது வயது மூதாட்டி ஒருவர் "என் வாழ் நாளில் இதுபோன்ற ஒரு பேய் மழையை நான் பார்த்ததில்லை " என்று வருத்தத்துடன் கூறுகின்றார் .

 

News Counter: 
100
Loading...

youtube