கச்சா எஃகு உற்பத்தி 4% சரிவு... ஜப்பானுடன் மோதும் இந்தியா

share on:
Classic

கடந்த ஜனவரியில் நாட்டின் ’கச்சா எஃகு’ (Crude Steel) உற்பத்தியானது  4% அளவிற்கு சரிந்துள்ளது. 

’கச்சா எஃகு உற்பத்தி செய்வதில் உலகின் 2-வது மிகப்பெரிய நாடு இந்தியா’ என   கடந்த மாதம் 25-ஆம் தேதியன்று உலக எஃகு தயாரிப்பாளர்கள் சங்கம் (WorldSteel) அறிவித்தது. கடந்தாண்டில் இந்தியா 106.5 மில்லியன் டன்களும், ஜப்பான் 104.3 மில்லியன் டன்களும் கச்சா எஃகை உற்பத்தி செய்திருந்தன. இதனால், ஜப்பானை பின்னுக்குத்தள்ளிய இந்தியா 2-வது இடத்தை வசப்படுத்தி இருந்தது. ஆனால் அதற்குள் இப்போது ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. 

கடந்த ஜனவரியில் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எஃகு உற்பத்தியானது 3.8%ஆக சரிந்து 8.995 மில்லியன் டன்களாக குறைந்திருக்கிறது என கூட்டு ஆலைக்குழு (JPC) தெரிவித்துள்ளது. மேலும், கடந்தாண்டு டிசம்பரில் 0.2% அளவிற்கு ஏற்கனவே சரிவு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே ஜனவரி மாதத்தில் 9.355 மில்லியன் டன்கள் கச்சா எஃகு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar