டெல்லியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது CSK..!

share on:
Classic

2-வது தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

ஐபிஎல் 2019க்கான இரண்டாவது தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி பேட்ஸ்மேன்களின் தொடக்க வீரரான ப்ரித்வி ஷா 5 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அதேபோல் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சென்னையில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 20 ஓவர் முடிவுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 147 ரன்கள் எடுத்தது.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான டூபிளசிஸ், வாட்சன் நிதானமாக விளையாடி தங்களது அணியை வெற்றிப் பாதைக்கு உந்தித் தள்ளினர். இதில் டு பிளசிஸ் வாட்சன் ஆகிய இருவரும் தலா 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய ரெய்னா, தோனி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர், அம்பதி ராய்டு நிதானமாக அதிரடியை வெளிப்படுத்தி சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதில் 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை 151 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

 

News Counter: 
100
Loading...

Ragavan