ஐபிஎல் தொடரின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்..?

share on:
Classic

ஐபிஎல் தொடரின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான குவாலிபயர் 2 போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன. 

ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2 போட்டிகளே மீதம் உள்ள நிலையில் இறுதி போட்டியில் பங்கேற்கும் 2வது அணியை முடிவு செய்யும் குவாலிபயர் 2 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.  

இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஐதராபாத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பங்கேற்கும். மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind