ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடந்து வந்த பாதை..!!

share on:
Classic

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலம் வாய்ந்ததாக திகழ்கின்றன.

ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை மும்பை அணிகள் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 16 முறையும், சென்னை அணி 11 முறையும் போட்டியை வென்றுள்ளன. இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2010ஆம் ஆண்டு மட்டும் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி மகுடம் சூடியது. பிறகு 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் மும்பையிடம் தோல்வியைத் தழுவி சென்னை அணி கோப்பையை இழந்தது. இதனைத் தொடர்ந்து இன்று 4வது முறையாக இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணி 7 முறை இறுதிப்போட்டியில் விளையாடி 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது. மும்பை அணி 4 முறை இறுதிப் போட்டியில் விளையாடி 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 

ஐ.பி.எல் வரலாற்றில் 4வது முறையாக மகுடம் சூட இரு அணி வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். மேலும், வலுவான வீரர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இரு அணிகளும் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை. நடப்பு சாம்பியன் சென்னை அணி கோப்பையை தக்க வைக்குமா..? நடப்பு தொடரில் மூன்று முறை வீழ்த்திய மும்பையை, இறுதிப் போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் பழிதீர்க்குமா..? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth