கொல்கத்தாவை வாரி சுருட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்..!

share on:
Classic

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை அணி அபார வெற்றிபெற்றது. 

சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ்லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். சென்னை அணியின் பந்வீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். கிறிஸ் லின், ராணா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். 

ஆந்த்ரே ரஸ்ஸல் மட்டும் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் முட்டுமே குவித்தது. சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர் 3 விக்கெட் கைப்பற்றினார். ஹர்பஜன்சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து, 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.  இதன் மூலம் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. அதிகபட்சமாக டூ பிளஸிஸ் 43 ரன்கள் குவித்தார். ராயுடு 21 ரன்னும், வாட்சன் 17 ரன்களும் சேர்த்தனர். கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய  சென்னை வீரர் தீபக் சாஹர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

News Counter: 
100
Loading...

aravind