‘நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சி 7% தான்’ - ஆசிய வளர்ச்சி வங்கி...!!

share on:
Classic

நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்து காணப்படும் என ஆசிய வளர்ச்சி வங்கியானது தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியானது 2019-20க்கான நடப்பாண்டில் முந்தைய மதிப்பீட்டை விட 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைந்து காணப்படும் என ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியானது முந்தைய மதிப்பீட்டின் படி 7.2 சதவிகிதம் என்ற இலக்கை எட்டக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் எட்டக்கூடும் என உலக வங்கி பொருளாதார ஆய்வறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வளர்ச்சி விகிதம் அதை விட குறைந்து 6.8 என்ற சதவீதத்திலேயே நின்றுவிட்டது. பொருளாதார வளர்ச்சி என்பது நடப்பு நிதியாண்டில் பருவமழை பொழிந்து விவசாயத்தில் விளைச்சல் அதிகரித்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் பருவமழையானது சுமார் 20 சதவீதம் வரை குறைவாகவே பெய்துள்ளது.

இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. மழைபொழிவானது கூடுதலாக பெய்தால் மட்டுமே விளைச்சல் அதிகரித்து நடப்பாண்டில் வளர்ச்சி விகிதம் உயரும் என்றும், கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்பாராத விதமாக 6.8 சதவீதமாக முடங்கியதால் அதன் தாக்கம் இந்த ஆண்டும் எதிரொலிக்கிறது என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.    

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan