புதுவையில் பெயிட்டி புயல் பாதிப்பால் ஏனாம் பகுதி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!

share on:
Classic

பெய்ட்டி புயல் காரணமாக புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. 

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இன்று நண்பகல் 80 கி.மீ வேகத்தில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது. இதன் காரணமாக ஏனாம் பிராந்தியத்திலும் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் பல்வேறு இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்துள்ளன. 

புயல் கரையை கடந்தாலும் ஏனாம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளன. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை, மின்துறை, தீயணைப்புதுறை, உள்ளாட்சித்துறை என அனைத்து துறை ஊழியர்களும் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

அதுமட்டுமல்லாமல் தாழ்வானப் பகுதிகளில் வசிக்ககூடிய மக்கள், நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் ஏனாம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இதனிடையே தொடர் மழை மற்றும் புயல் பாதிப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசு நாளை விடுமுறை அளித்துள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth