வாயு புயல் : 2.75 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

share on:
Classic

வாயு புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக குஜராத் மாநில கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 2.75 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்துக்கு வாயு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமாநில முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அனைத்து துறைகளையும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிட்டார். ராணுவம், கடற்படை, விமானப்படை தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கடலோர மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 2 புள்ளி 75 லட்சம்மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், தேசிய பேரிடம் மீட்பு படையினர் 47 குழுக்கள் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan