வாயு புயல் : கடலோர பகுதிகளில் வாழும் 3 லட்சம் பேர் இடமாற்றம்

share on:
Classic

வாயு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத், டையூ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 லட்சம் பேரை முகாம்களில் தங்கவைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் மையம் கொண்டுள்ள வாயு புயல் தற்போது அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலானது குஜராத் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்த பகுதிகளான குஜராத், டையூ உள்ளிட்ட கடற்கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், கடலோர பகுதிகளில் உள்ள 3 லட்சம் பேரை இடம்பெயரச் செய்து முகாம்களில் தங்கவைக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan