வாயு புயல் : 70 ரயில் சேவைகள் ரத்து...

share on:
Classic

அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல் இன்று குஜராத் அருகே கரையை கடக்கவுள்ளதால், 70க்கும் மேற்பட்ட ரயில்கள் சேவையை வடக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

மேற்கு ரயில்வே புயல் காரணமாக 110 ரயில்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட், பாவ்நகர், வெரவல் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் போர்பந்தர், டையூ, பாவ்நகர், கேதோட், கண்ட்லா உள்ளிட்ட இடங்களில் விமான போக்குவரத்து அடுத்த 24 மணிநேரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநில அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan