திசை மாறியது வாயு புயல்..!

share on:
Classic

குஜராத் மாநில சௌராஷ்டிரா கடற்கரை பகுதியில் வாயு புயல் கரைகடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயல் வடமேற்கு திசையை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது.

தென்மேற்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்தது. இந்த புயலானது குஜராத்தின் துவார்க்க மற்றும் வேரவா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குஜராத்தின் சௌராஷ்டிரா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும்போது சுமார் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டது. வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த வாயு, தற்போது வடமேற்கு திசையை நோக்கி திரும்பியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலானது வெரவல், போர்பந்தர், துவார்கா ஆகிய கடற்கரை பகுதியிலேயே புயல் நகர்ந்துவிடும் எனவும் குஜராத்தை தாக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்க வாய்ப்பில்லை எனினும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குஜராத் கடற்கரை பகுதிகளில் கடற்படையினர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயத்த நிலையில் உள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan