இன்று கரையைக் கடக்கிறது வாயு புயல்..!

share on:
Classic

தென்மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் இன்று கரையைக் கடக்கிறது.

தென்மேற்கு அரேபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்தது. இந்த புயலானது குஜராத்தின் போர்பந்தர், மஹூவா பகுதியில் இன்று கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குஜராத்தின் சௌராஷ்டிரா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும்போது சுமார் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அதிதீவிர புயலாக மாறியுள்ள வாயு புயல், தற்போது அரேபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இருந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. வாயு புயல் காரணமாக மும்பை, கோவா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் கடற்படையினர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan