அதிதீவிரமாக மாறிய வாயு புயல்..!

share on:
Classic

தென்மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது.

தென்மேற்கு அரேபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்தது. இந்த புயலானது குஜராத்தின் போர்பந்தர், மஹூவா பகுதியில் நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குஜராத்தின் சௌராஷ்டிரா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும்போது சுமார் 165 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிதீவிர புயலாக மாறியுள்ள வாயு, தற்போது அரேபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் மையம் கொண்டுள்ளது. 

கோவாவில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பை கடற்கரை பகுதியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும், குஜராத் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதையடுத்து மும்பை, கோவா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் கடற்படையினர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind