சர்ச்சைக்குரிய கருத்துக்கு தலாய் லாமா மன்னிப்பு..!

share on:
Classic

புத்த மதத் தலைவராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு தலாய் லாமா மன்னிப்பு கேட்டுள்ளார்.

14-வது திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய் லாமாவுக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நிலை குறைவு ஏற்பட்டு வருகிறது. இதனால், 15-வது புத்த மதத் தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்தநிலையில், இது குறித்து பேசிய தலாய் லாமா, 15-வது புத்த மதத் தலைவராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் கவரக் கூடியவராக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, தலாய் லாமாவின் அலுவலகத்தில் இருந்து, இதற்கு மன்னிப்பு கேட்டு செய்தி குறிப்பு வெளியானது. அதில், தனது வார்த்தைகள் மக்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால், அதற்கு மனப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக் கொள்வதாக, தலாய் லாமா குறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan