பொடுகுத் தொல்லையா..? இதோ உங்களுக்கான டிப்ஸ்.....!!

share on:
Classic

நவீன மயமாக்கப்பட்ட இன்றைய காலக்கட்டத்தில் நம்முடைய தேவைகளுக்காக வாழ்க்கை என்னும் பயனத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறோமே தவிர நமது உடலுக்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை. இதனால் உடல் ரீதியான பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

இன்றைய காலத்தில் நம் தலைமுடியை முறையாக பராமரிக்காததால் பலருக்கு தலைமுடி உதிர்தல், பொடுகுத்தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. 

பொடுகு என்றால் என்ன?

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக  செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். இதனால் தலையில் அரிப்பு ஏற்படுகிறது.

பொடுகுத் தொல்லை ஏன் வருகிறது?

ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை போன்றவற்றை பயன்படுத்துதல், தலையை சுத்தமாக வைத்திருக்காமல் இருத்தல், கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களை அதிகம் உட்கொள்ளுதல். எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதிகமாக ஷாம்பு பயன்படுத்துவதாலும், கண்ட கண்ட ஜெல்களை தலையில் தேய்ப்பதனாலும், அதிக மனஅழுத்தம் இருப்பதாலும் இத்தொல்லை ஏற்படுகிறது.

பொடுகுத் தொல்லை போக்க வழிகள்:

  • சின்ன வெங்காயத்தை சிறுது எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.
  • பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.
  • தலையில் தயிர் தேய்த்து குளிப்பதால் இத்தொல்லை நீங்கும்.
  • வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணை தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொலையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.
  • பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிப்பது பொடுகு தொல்லைக்கு ஒரு நல்ல தீர்வாகும்.
     
News Counter: 
100
Loading...

aravind