பேன் தொல்லை பெரும் தொல்லை ... ஓட ஓட விரட்ட சிம்பிள் டிப்ஸ் !

share on:
Classic

வேப்பங்கொட்டைகளை அல்லது வேப்ப இலையை அரைத்து விழுதாக்கி, தலையில் தேய்க்கவும் அரை மணி நேரம் கழித்து, தலைமுடியை நன்கு அலசிவிடவும். இவ்விதம் செய்து வர பேன் தலைக்கு வரவே வராது.

வேப்பம்பூ பொடி, வெந்தயப்பொடி இவை இரண்டும் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். இவற்றை இரண்டறக் கலந்து தலையில் தேய்த்து வர பேன், பொடுகு, ஈறு தொல்லை இருக்காது.

சீயக்காய் குளியல் தலைக்கு நல்லது. வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் பொடி கொண்டு தலையை அலசினால் தலைமுடி சுத்தமாக இருப்பதோடு பேன், பொடுகு, ஈறு தலையை அண்டாது.

வசம்பை அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தலையில் தடவிக் குளித்து வார பேன் தொல்லை ஒழியும்.

குப்பை மேனி இலையை அரைத்து சாறு எடுத்து தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும்.

துளசி இலையை  அரைத்து, தலையில் தடவி குளித்து வர பேன்கள் செத்து விடும். 

News Counter: 
100
Loading...

sankaravadivu