நா எப்படிடா அவுட் ஆனேன்...! மிட்சல் விக்கெட்டால் கிரிக்கெட் அரங்கில் சர்ச்சை

share on:
Classic

நியூஸிலாந்து பேட்ஸ்மேன் டரைல் மிட்சல் ஆட்டமிழந்த விதம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. 

ஷாக் ஆகி நின்ற மிட்சல்:
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியின் 5-வது ஓவரில் இந்தியாவின் குருனால் பாண்டியா பந்து வீசிக்கொண்டிருந்தார். இந்த ஓவரில் குருனால் வீசிய கடைசி பந்து, நியூஸிலாந்து பேட்ஸ்மேன் மிட்சலின் காலில் பட்டதால் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் கேட்கப்பட்டது. குருனாலின் கர்ஜனையைத் தொடர்ந்து கள நடுவர் அவுட் கொடுத்ததால் மிட்சல் ’ஷாக்’ ஆகிவிட்டார். பந்து நேரடியாக தமது காலில் படவில்லை என்றும், முதலில் பேட்டில் தான் பட்டதாகவும் கூறிய அவர் ‘ரிவியூ’ கேட்டார். 

 

குழப்பமான முடிவு:
மிட்சலின் ரிவியூ கோரிக்கையை போட்டியின் மூன்றாவது நடுவர் ஷான் ஹைக் ஏற்றுக்கொண்டார். தொழில்நுட்ப உதவியோடு பந்து முதலில் எங்கு பட்டது? என்பது குறித்து ஷான் ஹாக் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பந்து முதலாவதாக பேட்டில் பட்டதன் பிறகே மிட்சலின் காலில் பட்டது அப்பட்டமாக தெரிந்தது. மேலும், பேட் மீது பந்து படும் தடமும் ஹாட்ஸ்பாட்டில்  (HotSpot) தெளிவாக இருந்தது. 

பிறகு ’ஸ்னிக்கோ’ தொழில்நுட்பத்தில் சோதித்த போது, பந்து படும் சத்தம் எழும்பிய நேரம் எப்போது என்பது துள்ளியமாக தெரியவில்லை. இதனால் ஷான் ஹைக் ’அவுட்’ என்று கூறியதைத் தொடர்ந்து கள நடுவரும் விரலைத் தூக்கியவாறு தன்னுடையை முந்தைய அவுட் முடிவை இறுதி செய்தார். 

 

சோனமுத்தா போச்சா...!
3-வது நடுவரின் இந்த முடிவை சற்றும் எதிர்பாராத மிட்சலும், களத்தில் இருந்த கேப்டன் வில்லியம்சனும் அதிர்ச்சியில் உறைந்தனர். ’இன்சைடு எட்ஜ்’ தான் என்பது நன்றாக தெரிந்தும் கூட நடுவர்கள் ஏன் இப்படி தவறுதலாக செயல்படுகிறீர்கள் என மிட்சல் ஆதங்கத்துடன் கத்திக்கொண்டிருந்தார். மேலும், நடுவரிடம் சென்ற மிட்சல் தனக்கு தயவு காட்டுமாறு கெஞ்சினார், கதறினார்.

 

கடுப்பேத்துறாங்க மை லார்டு:
நடுவரிடம் மிட்சல் முறையிடுவதைக் கண்ட தோனியும் ரோகித்தும் திடீரென ’எண்ட்ரி’ ஆனார்கள். ஒரு கட்டத்தில் தோனி கூட ’போனா போகுது’ என விட்டுக்கொடுத்து விட்டார். ஆனால், ரோகித்தின் பிடிவாதம் மட்டும் கடைசி வரை குறைந்ததாக தெரியவில்லை. ’நடுவர் ஒரு தடவை அவுட் கொடுத்துட்டா அது அவுட் தான்’ என ரோகித் அடங்கமறுக்க, மிட்சலுக்கு ’ஹார்ட் பீட்’ அதிகரித்து விட்டது. 

உடனே நடுவர் ’களத்திலிருந்து வெளியே செல்லுங்கள்’ என அழுத்தம் கொடுத்ததும் மிட்சல் தன்னுடைய முகத்தை தொங்கவிட்டவாறே நடையைக் கட்டி விட்டார். இவர் மைதானத்தை விட்டு வெளியே நடந்து சென்ற போது பார்வையாளர்கள் அனைவரும் கை கட்டை விரலை கீழே நோக்கி காட்டியவாறு வெறுப்பேற்றினர். இது, மிட்சலின் கோபத்தில் இன்னும் எண்ணெயை ஊற்றுவதாக அமைந்து விட்டது. அவரும் எதுவும் செய்ய முடியாமல் ’தலைவிதி’ என எண்ணி அமைதியாக சென்று விட்டார். 

 

என்ன செய்யப்போகுதோ ஐசிசி...?
முன்னதாக, ’அவுட் என்று தெரிந்திருந்தும் 3-வது நடுவர் ஷான் ஹைக் ஏன் தவறுதலாக நடந்து கொண்டார்?’ என்று தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பியபடி மாறி மாறி பேசிக்கொண்டிருந்தனர். மேலும், இந்த விவகாரத்தை சர்வதேச கிரிக்கெட் சங்கமான ஐசிசி கையில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். எது எப்படியோ, தெருவில் விளையாடும் கிரிக்கெட்டை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருந்தது மிட்சல் அவுட் ஆன விதம். 

 

News Counter: 
100
Loading...

mayakumar