ஐபிஎல் ஆரஞ்சு தொப்பி யாருக்கு?... வார்னர் தொடர்ந்து ஆதிக்கம்

share on:
Classic

ஆரஞ்சு தொப்பியை வெல்லும் முனைப்பில் டேவிட் வார்னர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 

ஐபிஎல்-ன் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது பாதியளவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், ஆரஞ்சு தொப்பிக்கான வெற்றியாளர் வாய்ப்புப் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி வீரர் டேவிட் வார்னர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இத்தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 400 ரன்களை குவித்துள்ளார். 140 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ள வார்னர் 1 சதம், 4 அரைசதங்கள், 12 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 

ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலின் 2-வது இடத்தில் 335 ரன்களுடன் பஞ்சாப் அணி வீரர் கே.எல்.ராகுல் தொடர்கிறார். இவருக்கு அடுத்தபடியாக, பஞ்சாப் அணியின் மற்றொரு வீரர் கெயில் 3-வது இடத்திலும், கொல்கத்தா வீரர் ரஸல் 4-வது இடத்திலும், பெங்களூரு வீரர் டி வில்லியர்ஸ் 5-வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 230 ரன்களுடன் 13-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

mayakumar