தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி யுனுஸ் அன்சாரி நேபாளத்தில் கைது..!!

share on:
Classic

இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலை அடுத்து தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி யுனுஸ் அன்சாரியை நேபாள் போலீசார் கைது செய்துள்ளனர். 

முன்னாள் நேபாள அமைச்சர் சலீம் அன்சாரியின் மகன் தான் யுனுஸ் அன்சாரி. தந்தை மகன் இருவருமே நிழலுக தாதா எனப்படும் தாவூத் இப்ராஹிமின் டி - கம்பெனியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். யுனுஸ் அன்சாரி பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு ஆதரவாக அங்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து இந்திய உளவுத்துறை அளித்த தகவலின்படி, யுனுஸ் நேபாள தலைநகர் காத்மண்டு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும் பாகிஸ்தானை சேர்ந்த முகமது நசாரூதின், முகமது அத்தர், நாடியா அம்பர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை அழைத்து வரவே யுனுஸ், விமானநிலையம் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்த 3 சூட்கேஸ்களில் சுமார் ரூ. 7.5 கோடி மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் இருந்தன. ம். ஐ.எஸ்.ஐ-ன் உத்தரவின் பேரில் போலி 2,000 ரூபாய் நோட்டுகளை நேபாள எல்லை வழியாக இந்தியாவிற்குள் அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

News Counter: 
100
Loading...

Ramya