ஆன்லைன் பணபரிவர்த்தனை வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவு

share on:
எஸ்பிஐ, ஆன்லைன் பணபரிவர்த்னை, #SBI #InternetBanking
Classic

எஸ்பிஐ ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கு வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இனணக்கும் காலக்கெடு இன்றுடன்(30/11/2018) முடிவடைகிறது.

இது தொடர்பாக எஸ்பிஐ வெளியிட்டு இருந்த சுற்றறிக்கையில், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பணபரிவர்த்தனை உபயோகிப்பவர்கள் டிசம்பர் 1ம் தேதிக்குள் தங்கள் மொபைல் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். இணைக்க தவறியவர்கள் ஆன்லைன் பணவர்த்தனையை உபயோகிக்க முடியாது. 

ஆகையால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள அனைவரும் உங்கள் வங்கி கணக்கு உடைய எஸ்பிஐ கிளையை நேரில் அணுகி டிசம்பர் 01ம் தேதிக்குள் மொபைல் எண்ணை தவறமால் இணைக்க வேண்டுமென்று தெரிவித்து இருந்தது.

எஸ்பிஐ கொடுத்த  காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால் மொபைல் எண்ணை இணைக்காதவர்கள் ஆன்லைன் பணவர்த்தனையை பயன்படுத்த முடியாது. மேலும் உங்களது மொபைல் எண் வங்கி கணக்குடன் முறையாக இணைக்கப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்து கொள்ளவும்.

News Counter: 
100
Loading...

vijay