நான்கு மொழிகளில் வெளியாகும் டியர் காம்ரேட் படம்..!!

share on:
Classic

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் தான் டியர் காம்ரேட்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா நடித்துள்ளார். பரத் கம்மா இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், யாஷ் ரங்கினேனி தயாரிக்க  ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய டியர் காம்ரேட் படம் , விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

டியர் காம்ரேட் படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை வரும் மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு . இதுமட்டுமில்லாமல் டியர் காம்ரேட் படத்தின் டீசர் வரும் 17ம் தேதி வெளியாகும் என படக்குழு ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan