கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி..!! மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு..!

share on:
Classic

தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி, இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் சாட் எல்வர்டோஸ்கி. இவரது தாய்லாந்து காதலி சுப்ரானே தெப்பெட். இவர்கள் தாய்லாந்தில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர். இந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து புகெட் போலீசில் புகார் செய்தனர். அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியும் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் இந்த வீடு கடற்கரையில் இருந்து 13 நாட்டிகல் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. தாய்லாந்து கடல் எல்லைக்கு அப்பால் உள்ளதாகவும், இறையான்மையை மீறவில்லை எனவும் சாட் எல்வார்டோஸ் கி தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan