புகை பழக்கத்தைவிட உணவுப் பழக்கத்தால் உயிரிழப்பு அதிகம்..! திடுக்கிடும் ஆய்வு அறிக்கை...

share on:
Classic

சர்வதேச அளவில், புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட மோசமான உணவுப் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் சார்பில், உணவுப் பழக்கம் குறித்து 195 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மோசமான உணவுப்பழக்கத்தால் ஆண்டுதோறும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும், புகைப்பழக்கத்தால் உயிரிழப்பவர்களை காட்டிலும் இது அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும், உணவில் அதிகளவில் உப்பு சேர்ப்பதாலும், தானியங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளாததாலும், போதிய உணவு சாப்பிடாததாலும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் நாடுகளில் வசிக்கும் மக்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடிப்பதாகவும், இஸ்ரேல், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்காதவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan