மூளைக்காய்ச்சலால் அதிகரிக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு..பீகாரில் தொடரும் அவலம்..!

share on:
Classic

பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் நாளுக்கு நாள் குழந்தைகளின் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளின் உயிரிழப்புக்கு லிச்சி பழங்களே காரணமாக கூறப்படும் நிலையில், லிச்சி பழத்தால் எப்படி உயிரிழப்பு நிகழக் கூடும் என விளக்குகிறது இந்த தொகுப்பு.

பீகார் மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. பீகாரில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் மூளைக் காய்ச்சலால் பரவி வருகிறது. குறிப்பாக முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோயின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. பீகாரில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து மட்டும் 600 குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தற்போது வரை 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

பீகாரில் ஆண்டுதோறும் லிச்சி பழங்கள் அறுவடை செய்யப்படும் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை மூளைக்காய்ச்சல் பரவுவது வழக்கமாகவே இருந்து வருவதாக கூறப்படுகிறது. அறுவடைக்காக தோட்டங்களில் தங்கி இருக்கும் தொழிலாளிகளின் குழந்தைகள் இந்த பழங்களை உண்ணுவதால் மூளைக்காய்ச்சல் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காலையில், நமது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருக்கும்போது, கல்லீரலில்  இருக்கும் கிளைக்கோஜன் குளுக்கோஸாக மாற்றப்படும்.  இதைத்தொடர்ந்தும், ரத்தத்தில் போதிய குளுக்கோஸ் அளவு இல்லாத பட்சத்தில், கொழுப்பு அமிலங்கள் குளுக்கோஸாக மாற்றப்படும். 

ஆனால், ஊடச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் லிச்சி பழங்களை சாப்பிட்டு,  இரவு நேரங்களில் வெறும் வயிற்றோடு உறங்கினால், கொழுப்பு அமிலங்கள் குளுக்கோஸாக மாற்றப்படுவதில் சிக்கல் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், ரத்தத்தில் குளுக்கோஸ் குறைப்பாடு ஏற்பட்டு, குழந்தைகள் கோமா நிலைக்கு செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் இது உயிரிழப்பாக மாறுகிறது. 

10 சதவிகிதம் டெக்ஸ்ட்ரோஸை குழந்தைகளின் உடலுக்குள் செலுத்தினால் மூளைக்காய்ச்சல் பாதிப்பால், உயிரிழப்புக்களை தடுக்கலாம் எனவும் ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

News Counter: 
100
Loading...

aravind