பிரான்சில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

share on:
Classic

பிரான்சில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பிரான்சில் பெய்த கனமழையால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் படகுகள் மூலம் மக்களை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் 7 ஹெலிகாப்டர்கள், 700 பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன

News Counter: 
100
Loading...

sasikanth