மும்பை ரயில்வே மேம்பால நடைமேடை விழுந்து விபத்து..பலி எண்ணிக்கை உயர்வு..!

share on:
Classic

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையத்தில் நடைமேடை விழுந்து விபத்துக்குள்ளனாதில் பலியானோர் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.

மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை மேம்பாலத்தில் ஏராளமான பயணிகள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நடைமேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, சம்பவ இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணிகளை பார்வையிட்ட மகாராஷ்டிரா அமைச்சர் வினோத் தாவ்டே, விபத்து குறித்து பிரிஹன் மும்பை நகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தும் என தெரிவித்தார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சையை அரசு அளிக்கும் என்றும் உறுதியளித்தார்.

இந்த நிலையில் இரயில் நிலைய மேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்ததற்கு அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மும்பை மாநகர ஆணையர், மும்பை காவல்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் அறிவுறுத்தி இருப்பதாக அவர் கூறினார். மேலும் மேற்கு ரயில்வே நிர்வாகத்துடன் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்ளும் என அவர் விளக்கமளித்தார்.

 

News Counter: 
100
Loading...

sajeev