நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை..43 பேர் உயிரிழப்பு..!

share on:
Classic

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு ஊர்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், தாழ்வான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சார வினியோகம் தடைபட்டுள்ளது. இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. 

வெள்ளத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மழை காரணமாக நாட்டின் பல தேசிய நெடுச்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind