வீட்டின் மீது விமானம் மோதி விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு

Classic

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது

கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஆரஞ்சு கவுண்டியின் புல்லர்டென் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. யோர்பா லிண்டா (Yorba Linda) நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், அங்குள்ள வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind