பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த முடிவு

share on:
Classic

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த அமெரிக்காவை தவிர ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகளும் உறுதியேற்றன.

கார்பன் டை ஆக்சைடு, குளோரோ புளூரோ கார்பன் போன்ற பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த உலகநாடுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றது. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் நிறைவு நாளான இன்று, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்துவது என, அமெரிக்காவை தவிர ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகளின் தலைவர்களும் உறுதியேற்றனர். பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா தற்போதும், உறுதியேற்பில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind