மாணவியை எரித்து மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்..!!

share on:
Classic

கல்லூரி மாணவியை எரித்து மரத்தில் தொங்கவிட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 16-ம் தேதி கர்நாடக மாநிலம் ராய்ச்சரில் உள்ள காட்டுப் பகுதியில் சிதைந்த நிலையில் மரத்தில் தொங்கிய ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அது நவோதயா பொறியியல் கல்லூரியில் படிக்கும் மது என்ற மாணவியின் உடல் என்று தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதத்தில் தான் கல்லூரியில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த ராய்ச்சூர் எஸ்.பி. மற்ற விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனிடையே நேற்று மாநில அரசு இது குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. அவர் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் எனவும், பாலியல் வன்கொடுமை செய்து அவரை கொலை செய்துள்ளதாகவும், அவருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர். மேலும் டிவிட்டரில் #JusticeForMadhu என்ற ஹாஷ்டாகும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 

News Counter: 
100
Loading...

Ramya