வெயிலின் தாக்கத்தால் குடிநீர் தேடி வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான் 

share on:
Classic

ஓசூர் அருகே சொக்கரசனப்பள்ளி கிராமத்தில் வெய்யிலின் தாக்கத்தால் தண்ணீர் தேடி புள்ளிமான் வீட்டிற்குள் புகுந்தது.

ஒசூர் பகுதிகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், வனப்பகுதிகயில் உள்ள வனவிலங்குகள் நீர் நிலைகளில் தண்ணீர் கிடைக்காமல் அருகிலுள்ள கிராமப்பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மானை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் புள்ளிமானை பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind