ஐதராபாத்தை வீழ்த்தி 2-வது தகுதிச்சுற்றுக்குள் நுழைந்தது டெல்லி..!

share on:
Classic

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் சன் ரைசர்ஸ் ஐதரபாத்தை வீழ்த்தி டெல்லி அணி, 2-வது தகுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளது.  

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் 28 ரன்களும், மணிஷ் பாண்டே 30 ரன்களும், மார்ட்டின் கப்தில் 36 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதனிடையே தவான் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யரும் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை அளித்தனர். இந்நிலையில், கடைசி ஓவர் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், கடைசி ஒரு பந்து மீதமிருந்த நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 2-வது தகுதிச்சுற்றுப் போட்டிக்கு டெல்லி அணி முன்னேற, தோல்வியடைந்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியது.

 

News Counter: 
100
Loading...

aravind