பாஜகவால் உயிருக்கு ஆபத்து : அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!

share on:
Classic

பாஜகவால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், தான் இந்திரா காந்தியைப் போல தன்னுடைய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்படுவேன் என்று தெரிவித்துள்ளார். பாஜக தனது உயிருக்கு ஆபத்தாக உள்ளதாகவும் அவர்கள் ஒருநாள் தன்னை கொலை செய்வார்கள் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், அரவிந்த் கெஜ்ரிவாலின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட பாதுகாப்பு வீரர்கள் தங்களுடைய கடமையைச் செய்துவருகிறாகள் என்றும் தங்களுடைய பாதுகாப்பு வீரர்கள் அனைத்து அரசியல் கட்சியிலும் உள்ள உயர்மட்ட தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அண்மையில், அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் திறந்த வாகனத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது திடீரென ஒருவரால் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan