விராட் கோலிக்கு ரூ. 500 அபராதம் விதித்த மாநகராட்சி..!

share on:
Classic

குடிநீரால் காரை கழுவியதால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 500 அபராதம் விதித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள குருகிராமில் வசித்து வரும் கோலியின் வீட்டிற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், அவரது ஊழியர்கள் குடிநீரில் கார்களை கழுவதை பார்த்து விட்டு ரூ. 500 அபராதம் விதித்தனர். டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனை மீறியதால் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News Counter: 
100
Loading...

Ragavan