கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்க : விஷ்ணு குப்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

share on:
Classic

நாதுராம் கோட்சே குறித்து கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கமலுக்கு எதிராக 'ஹிந்து சேனா' அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் அக்கறை காட்டுவதற்கான காரணம் என்ன என மனுதாரர் விஷ்ணு குப்தாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். கமல் கோட்சே குறித்து பேசியதற்கான ஆதாரங்களை ஆகஸ்ட் 2-ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு, உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினமே அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொள்வதாகவும் தெரிவித்தார். அதன்பின்னர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு செய்யலாம் என நீதிபதி குறிப்பிட்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan