கேள்விக்குறியான டெல்டா பாசனம்..கவலையில் விவசாயிகள்..!

share on:
Classic

போதிய நீர் இருப்பு இல்லாததால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆண்டு தோறும் ஜூன் 12ம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதற்காக ஜூன் 12 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 28 வரை தேவைக்கு ஏற்ப தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படால் மட்டுமே டெல்டா பகுதிகளில் குறுவை , சம்பா ,தாளடி ஆகிய முப்போக நெற்பயிர்கள் மட்டுமல்லாது, பிற பயிர் தேவைகளும் பூர்த்தியாகும். 

ஆனால் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான அளவிற்கு மழை பொழியாததால்,  நீர் மட்டம்  45  அடியாகவும்,  நீர் இருப்பு  15  டி.எம்.சியாகவும் உள்ளது. இதனால் டெல்டா பாசனத்திற்கு தேவையான நீரை திறந்துவிட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 9 புள்ளி 2 டி.எம்.சி. தண்ணீர்  திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind