ஜனநாயகத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ் : அவசர நிலை குறித்து ஜே.பி. நட்டா கருத்து..

share on:
Classic

ஜனநாயகத்தை கொலை செய்தது காங்கிரஸ் தான் என்று பாஜக செயல் தலைவர் விமர்சித்துள்ளார். 

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, இதே ஜூன் 25-ம் தேதி தான் அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தினார். 1975 முதல் 1977 வரையிலான 21 மாதக் காலக்கட்டம் நாடு முழுவதும் அவசர நிலை இருந்தது. இதற்கு நாடு முழுவதும் கிளம்பிய எதிர்ப்பலையில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்டின் சர்ச்சைக்குரிய காலக்கட்டமாக இது பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் அவசர நிலையின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அவசர நிலையை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் தலை வணங்குவதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டார். செய்தித்தாள்கள் முடக்கப்பட்டது, மக்கள் அடிப்படை உரிமைகளை இழந்தது ஆகியவற்றை நினைவு கூர்ந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டில் ஜனநாயகத்தை மறுசீரமைத்த லட்சக்கணக்கான தியாகிகளுக்கும் தலை வணங்குவதாக தெரிவித்தார்.

இதே போல் பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் “ ஜனநாயகத்தை உயிரோடு வைப்பதற்காக, அவசரநிலையை எதிர்த்து போராடிய அனைத்து தியாகிகளையும் தலை வணங்குகிறேன். 1975-ல் அமலுக்கு வந்த அவசர நிலை ஒரு கரும்புள்ளி என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya